இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் காணொலிக் கட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்புரையாற்றினார். அதில் கரோனாவால் பாதிப்பிற்குள்ளான தொழில் துறை, உற்பத்தித் துறை தொடர்பாகப் பேசினார்.
அதில் மோடி பேசியதாவது:
கரோனாவுக்குப்பின் இதுபோன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்தியர்கள் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கரோனா ஊரடங்குக்குப் பின் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் கட்டத்திற்கு நாடு தற்போது நுழைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தற்போதைய முதன்மை நோக்கம். ஒருபுறம் உயிரை பாதுகாப்பதுபோல், பொருளாதாரத்தையும் காக்க வேண்டியது நமது கடமை.
உலகம் தற்போது நம்பிக்கையான தோழமையைத் தேடிவருகிறது. அதற்கான ஆற்றலும் சக்தியும் இந்தியாவுக்கு உள்ளது. நமது நாடு தனது வளர்ச்சியை மீண்டும் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
அரசின் 'தற்சார்பு இந்தியா' திட்டம் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். குறிப்பாக குடிபெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை, மக்கள் நினைத்துப்பார்க்காத சீர்த்திருத்தங்களை அரசு உறுதியுடன் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உற்பத்திசெய்து அதை உலகிற்கே கொடுக்கும்விதமாக நாம் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மத்திய அமைச்சரவை முடிவுகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் - பிரதமர் மோடி