ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. நாடாளுமன்றம் இன்று கூடியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் இருஅவைகளிலும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "இந்த சம்பவம் நாடாளுமன்றத்தை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது. கேள்விநேரம் முடிந்தவுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும்" என தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இந்த சம்பவத்தை கண்டித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க சட்டம் போதாது. விழிப்புணர்வு தேவை" என்றார்.