தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி கலவரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு - Delhi violence

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல் அமளி தொடர்வதால் நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.

Parliament
Parliament

By

Published : Mar 5, 2020, 2:38 PM IST

Updated : Mar 5, 2020, 4:20 PM IST

டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றனர். இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.

இரண்டாவது நாளாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் கலந்து கொள்ளவில்லை. நடவடிக்கைகள் பாஜக தலைவர் பி மஹ்தாப் தலைமையில் நடைபெற்றது. டெல்லி வன்முறை தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக்கோரி சுமார் 30 உறுப்பினர்கள் (பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்) கோஷங்களை எழுப்பி, பலகைகளைக் காட்சிப்படுத்தினர்.

இதற்கிடையில் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார். அப்போது மஹ்தாப், “இடையூறுகளால் எந்த நோக்கமும் நிறைவேறாது. அரசும் எதிர்க்கட்சியும் அமர்ந்து கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டால், டெல்லி வன்முறை, கொரோனா வைரஸ் போன்ற பிரச்னைகள் அவையில் விவாதிக்கப்படலாம்” என்றார்.

மேலும், அவையில் நடந்த சம்பவங்களால் சபாநாயகர் (ஓம் பிர்லா) கலக்கமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் மஹ்தாப் கூறினார்.

இதேபோல் மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க :கேரள மூதாட்டி பாகீரதி அம்மாவுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது

Last Updated : Mar 5, 2020, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details