தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய விமானப்படை தினம்: தலைவர்கள் வாழ்த்து! - பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இந்திய விமானப்படையின் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விமானப்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

88 ஆவது ஆண்டு இந்திய விமானப் படையின் தினம்
88 ஆவது ஆண்டு இந்திய விமானப் படையின் தினம்

By

Published : Oct 8, 2020, 12:55 PM IST

இந்திய பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் இந்திய விமானப்படையின் 88ஆவது ஆண்டு தினம் இன்று (அக். 8) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வீரர்களின் சாகசங்கள், அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விமானப்படையின் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டின் வான்வெளியை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.

உங்களது தைரியம், வீரம், அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “விமானப்படை வீரர்கள், இந்திய விமானப்படை சாதனையாளர்கள், அவர்களது குடும்பத்தினரை பெருமைப்படுத்த வேண்டும். வான்வெளியில் நாட்டின் பாதுகாப்பையும், பேரிடர் காலங்களில் உதவிகள் செய்வதையும் உறுதி செய்யும் விமானப்படைக்கு நம் நாடு மிகுந்த கடமைப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜப்பான் பிரதமருக்கு மோடி வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details