மகாராஷ்டிராவில் நீடித்துவரும் அரசியல் குழப்பத்தைத் தீர்க்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பாஜக அங்கு அனுப்பியுள்ளது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு பாஜக திணறிவருகிறது. இப்படிப்பட்ட நிலையில், அங்கு சென்றுள்ள நிதின் கட்கரி சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதின் கட்கரியை நேற்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது பட்டேல் சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக நிதின் கட்கரி தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கட்கரி, "மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பட்னாவிஸே தொடர்வார்" என்றார்.