நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பிகாரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளதில் மூழ்கியுள்ளன.
இன்றுவரை பிகாரில் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மதுபனி, சிவான் ஆகிய பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால், இந்த பகுதிகளை ஒட்டியுள்ள 71 கிராமங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.