வடமாநிலங்களில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை உள்ளிட்ட மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். வெப்பக் காற்று காரணமாக மக்கள் தங்களின் துணியால் முகத்தை மூடிக்கொள்வார்கள். அந்தக் காலங்களில் அவர்கள் பெரும்பாலும் லிச்சி பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.
அதற்கேற்றார் போல் இந்த லிச்சிப் பழங்களும் சந்தையில் விலை மலிவாக கிடைக்கும். ஆனால் நடப்பாண்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. லிச்சிப் பழங்கள் விளைச்சல் பெருமளவு இருந்தும், கரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது பழத்தை சந்தைப்படுத்தவும் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் பழத்தை வாங்கி விற்பனை செய்யவும் வியாபாரிகள் தயாரில்லை. இதனால் லிச்சி பழ உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்த பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.