கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் மக்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அசாமில் நேற்று முதல் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் எனவும் கடைகளில் பணியாற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .