இந்தியாவில் ஆண்டுதோறும் மதுபான விற்பனை அதிகரித்துவரும் நிலையில் 2019-20 நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் 6 மாத காலகட்டத்தில் கரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட மதுபான விற்பனை தடை, மதுபானம் மீது போடப்பட்ட 50 விழுக்காடு கரோனா வரி, ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் மதுபான விற்பனை 29 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக ஆந்திரா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் மதுபானம் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான வரி காரணமாகக் கடுமையான சரிவை எதிர்கொண்டுள்ளதாக இந்திய மதுபான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திரா (51 விழுக்காடு), சத்தீஸ்கர் (40 விழுக்காடு), மேற்கு வங்கம் (22 விழுக்காடு), ராஜஸ்தான் (20 விழுக்காடு) சரிந்துள்ளது. இந்த மாநிலங்களில், விற்பனை கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்தது. மேலும் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை மது விற்பனை 39 விழுக்காடு சரிந்துள்ளது.