தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுற்றுப்புறத்தை பாழாக்கும் மதுபாட்டில்கள்- பயனுள்ளதாக மாற்றும் பட்டதாரி பெண்! - பட்டதாரிப் பெண் சிறப்பு தொகுப்பு

புதுச்சேரி: மதுப் பிரியர்களால் சாலையில் வீசி எறியப்படும் பாட்டில்களை சேகரித்து, அதில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து சுபநிகழ்வுகளின்போது பரிசாக வழங்கும் பட்டதாரி பெண்ணைப் பற்றி இந்த சிறப்புத் தொகுப்பில் காண்போம்.

பட்டதாரி பெண்
பட்டதாரி பெண்

By

Published : Nov 19, 2020, 3:08 PM IST

Updated : Dec 1, 2020, 3:27 PM IST

புதுச்சேரி ஆன்மிக பூமி, சுற்றுலாவிற்கு உகந்த இடம், மதுப்பிரியர்களுக்கு சொர்க்கபூமி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சில சுற்றுலாப் பயணிகள், மதுப்பிரியர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆங்காங்கே சாலையில் தூக்கி எறிகின்றனர். இதில் உடைந்துபோன மதுபாட்டில்கள் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்திவருகிறது.

இது குறித்து பொதுமக்களுக்கும், மதுப்பிரியர்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அவற்றைச் சேகரித்து உபயோகமான பொருளாக மாற்றி தனது நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கு உடைந்துபோன மதுபாட்டில் ஓவியங்கள் வரைந்து அளித்து வருகிறார் புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வ உ சி நகர் பகுதியை சேர்ந்த திவ்யா.

மதுபாட்டில்களை பயனுள்ளதாக மாற்றும் பட்டதாரி பெண்

பட்டதாரி பெண்ணான இவர், அந்த பாட்டில்களில் சமுதாயத்தில் அவ்வப்போது ஏற்படும் சமூக நிகழ்வுகளை மையகருத்தாக கொண்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஓவியங்களாக வரைந்து உறவினர்களின் சுப நிகழ்ச்சியின்போது பரிசாக வழங்கி வருகிறார்.

இதுகுறித்து திவ்யா கூறுகையில், சுற்றுலாத்தலங்கள், கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதிகள், முக்கிய சுற்றுலா தலங்களில் மது பிரியர்கள் பாட்டில்களை ஆங்காங்கே தூக்கி வீசி செல்கின்றனர். இதனால் உடைந்த மது பாட்டிலால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பாதிப்பு ஏற்படவதை தன்னால் முயன்றவரை தடுக்கும் நோக்கில் சாலையில் செல்லும் போது உடைந்த பாட்டில்கள், மதுபாட்டில்கள், பயனற்ற பாட்டில்கள் கிடைக்கும் போது அவற்றை சேகரித்து வைத்து குப்பை தொட்டியில் பாதுகாப்பாக வைத்து வந்தேன். நாளடைவில் கரோனா காலத்தில் வீட்டில் முடங்கி இருந்ததால் அதனை பயன்படுத்தி உபயோகமான ஓவியங்களை வரைந்து வருகிறேன். என்றார்

மேலும் தன்னைப்போல் நண்பர்களும் சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து பாதுகாப்பாக குப்பைத் தொட்டியில் போடுமாறும், அதனை பயனுள்ள பொருளாக மாற்றும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தந்த பாட்டில் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு படங்களை வரைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திவ்யாவின் கணவர் பரத் கூறுகையில், என்னோட மனைவி சாலையில் கிடக்கும் மது பாட்டில்களை எடுத்து சேகரித்து அதனை பாதுகாப்பாக குப்பையில் போட்டு வந்தார். நானும் உதவிவருகிறேன் நாளடைவில் சேகரிக்கப்பட்ட பாட்டிகளிலில் விழிப்புணர்வு ஓவியம் வரைய முயற்சித்தார். பின்னர் அந்த பாட்டீல் ஓவியங்களை எங்களது நண்பர்கள் சுபநிகழ்ச்சியின்போது பரிசாக வழங்கி வருகிறோம். என தெரிவித்தார்.

சமுதாயத்தை பாழாக்கும் பொருள்களை கூட வீணாகாமல் பயனுள்ளதாக மாற்றுவதில் பெண்கள் எப்போதுமே சிறப்பானவர்கள் தான். இதனை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கும் பட்டதாரி திவ்யாவும் பாராட்டுக்குறியவர்தான்.

இதையும் படிங்க: சகோதரரின் முகத்திரையை கிழித்த ஆவின் அலுவலர்; வழக்கறிஞர் மிரட்டல்!

Last Updated : Dec 1, 2020, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details