தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உடல்நலக் குறைவால் 'ஜீது' சிங்கம் மரணம்! வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை - நேரு உயிரியல் பூங்கா

ஹைதராபாத்: நேரு உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டுவந்த 'ஜீது' என்ற சிங்கம் உயிரிழந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jeetu lion'

By

Published : Jul 21, 2019, 8:46 AM IST

Updated : Jul 21, 2019, 9:06 AM IST


தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் மீர் ஆலம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது நேரு உயிரியல் பூங்கா. இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 1,500 வகையான உயிர் வாழினங்கள் பராமரிக்கப்படுகின்றன.

இவைகளில் 340 பறவை இனங்களும், அதிக எண்ணிக்கையில் ஊர்வனவும் அடங்கும். இங்குள்ள பெரும்பாலான உயிரினங்கள் இயற்கைச் சூழலிலே உள்ளன.

ஜீது' சிங்கம்

இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டுவந்த ஐந்து வயது ஜீது என்ற சிங்கம் கடந்த சில நாட்களாக கீழ்வாதம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது. கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில், அனைத்து உறுப்புகளும் செயலிழந்து நேற்று மரணம் அடைந்தது. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jul 21, 2019, 9:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details