தமிழ்நாடு

tamil nadu

அசாம் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட வரலாறு காணாத வெள்ளம்!

By

Published : Jul 20, 2020, 8:01 PM IST

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் பொங்கைகான் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

flood-ravaged-assams
flood-ravaged-assams

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தின் 28 மாவட்டங்களில் உள்ள 36 லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மூவாயிரத்து 14 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் 86 மிருகங்கள் உயிரிழந்துள்ளன. ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 500 பேரை மீட்டு,711 முகாம்களில் அவர்களைத் தங்கவைத்துள்ளனர்.

அசாமின் முக்கிய நகரமான பொங்கைகானில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. மக்களுக்கு குடிநீர், உணவு பெறுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கித் தவித்தவரின் வீடியோ காட்சி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details