நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. இன்று இரவு புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில், நிவர் புயலை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மக்கள் யாரும் வெளியே சுற்றாமல் வீட்டுக்குள்ளே இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
நிவர் புயல்: மக்களுக்கு கிரண் பேடி அட்வைஸ் - தமிழ்நாட்டில் கனமழை
நிவர் புயல் காரணமாக, புதுச்சேரி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர்
மேலும், அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ள அவர், புயலால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி - புதுச்சேரி பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை