தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிகார துஷ்பிரயோகம் செய்யும் துணை நிலை ஆளுநர் - நாராயணசாமி குற்றச்சாட்டு - misuses power slams puducherry cm

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலால் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

puducherry cm
puducherry cm

By

Published : May 10, 2020, 5:56 PM IST

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரி திரும்பிய இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் சுரக்குடையைச் சார்ந்த ஒருவர் காவல்துறையினர் சார்பில் கைது செய்யப்பட்டு அவரை சோதனை செய்தபோது, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வெளிமாநிலத்திலிருந்து புதுச்சேரி திரும்பியவர்களைக் கணக்கெடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது, வெளிநாட்டிலிருந்து புதுச்சேரிக்கு 2 ஆயிரத்து 700 பேர் வரவுள்ளனர். தவறு யார் செய்தாலும் தட்டி கேட்கலாம். அதற்காக, புகார் கொடுத்த மதுக்கடை உரிமையாளர் மீதே வழக்குப் போடுவது மிகப்பெரிய தவறு.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காவல்துறை அலுவலர்களுக்கு நேரடியாக உத்தரவிட்டு, குழப்பத்தை ஏற்படுத்திவருகிறார். மதுக்கடைகள் உரிமத்தை, ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து பறிப்பது அதிகார துஷ்பிரயோகம். கலால் துறை சார்பில், தேவையில்லாமல் மதுக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்தது குறித்து தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சார வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இதனை மத்திய அரசு தடுக்கும் வகையில் செயல்படுகிறது. இச்செயலை முழுமையாக எதிர்ப்போம்" என்றார் முதலமைச்சர் நாராயணசாமி.

இதையும் படிங்க:விசாக் விஷவாயு விபத்து நடந்தது எப்படி? வெளியானது முதல் தகவல்

ABOUT THE AUTHOR

...view details