2017ஆம் ஆண்டு மத்திய அரசு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி) இணைந்து 60 வயதுக்கும் மேலான மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஓய்வூதிய திட்டமான பிரதமர் வயா வந்தனா யோஜனாவை அறிமுகப்படுத்தியது.
பிரதமர் வாயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி.ஒய்.) எனும் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி) இணைந்து அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் 2018 மே 3ஆம் தேதிவரை விற்பனை செய்யலாம் என அறிவித்திருந்தது. பின்னர், அந்த கால அவகாசம் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது அந்த சிறப்பு ஓய்வூதிய திட்டத்தை நிதியமைச்சகம் மாற்றியமைத்து, மீள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது, மே 26 முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை மூன்று நிதியாண்டுகளுக்கு முதலீட்டாளர்களின் பயன்பாட்டிற்கு இருக்கும்.
இது தொடர்பாக எல்.ஐ.சி வெளியிட்டுள்ள குறிப்பில், “மத்திய அரசின் மானியத்துடன் வடிவமைக்கப்பட்ட எல்.ஐ.சியின் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காப்பீட்டு தொகையாக 15 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கும் இந்த சிறப்புத் திட்டத்தை இயக்க எல்.ஐ.சிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச நுழைவு வயதாக 60 வயது வரையறை செய்யப்பட்டுள்ளது. பாலிசி காலமானது 10 ஆண்டுகள் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஒரு முழுமையான நிதியாண்டு, அரை ஆண்டுகள், காலாண்டுகள், 12 மாதம் என ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் செலுத்த வேண்டிய குறைந்தபட்சம் கொள்முதல் விலை மாதத்திற்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 162 ரூபாய், காலாண்டிற்கு 1 லட்சத்து 61 ஆயிரத்து 74 ரூபாய், அரை ஆண்டுகள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 574 ரூபாய், ஆண்டிற்கு 1 லட்சத்து 56 ஆயிரத்து 658 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.