மனித உரிமைகள் தொடர்பாக காங்கிரஸின் விசாரணை அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடந்தது. அப்போது காஷ்மீர் பகுதியில் 1990ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் அனுபவித்த கொடுமையை சுனந்தா வஷிஷ்ட் (Sunanda Vashisht) பகிர்ந்தார். அவர் பேசியதாவது:-
நான் காஷ்மீரைச் சேர்ந்த சிறுபான்மை இந்து சமூகத்தை சேர்ந்தவள். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இன அழிப்புக்கு நான் பலியானேன். பயங்கரவாதம் என்னை பிடுங்கிக் கொண்டது. என் வீட்டை அபகரித்துக் கொண்டது.
நான் உயிருடன் இருப்பதால் உங்களுடன் இதனைப் பேசுகிறேன். இதயத்தை ரணமாக்கும் ஒரு சம்பவத்தை நான் கூறப்போகிறேன். அவர் பெயர் பி.கே. கஞ்ச். அவர் ஒரு பொறியாளர். பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர். அவரது உடலை அரிசி மூட்டைக்குள் அடைத்தனர். அந்த அரிசி மூட்டையில் அவரது ரத்தம் படிந்திருந்தது. அந்த ரத்தம் தோய்ந்த அரிசியை, அவரது மனைவியை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினர். ஒரே நாள் இரவில் மட்டும் நான்கு லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பினர்.