தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாக் விஷவாயு விபத்து நடந்தது எப்படி? வெளியானது முதல் தகவல் - Vizag accident

டெல்லி: சேமிப்பு கலனில் ஏற்பட்ட நீராவி கசிவால் விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு நிகழ்ந்துள்ளது.

LG Polymers says vapour leak caused accident at Vizag plant
LG Polymers says vapour leak caused accident at Vizag plant

By

Published : May 10, 2020, 3:50 PM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலையில், கடந்த 7ஆம் தேதி அதிகாலை விஷவாயு கசிந்தது.

இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

இந்நிலையில் விஷ வாயு விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணை முடிவில் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஆலையிலிருக்கும் ஒரு சேமிப்பு கலனிலிருந்து நீராவி கசிந்துள்ளது. இதன் அழுத்தம் காரணமாக விஷ வாயு ஸ்டைரீன் மோனோமர் கசிந்துள்ளது” என அந்த முதல் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தென் கொரிய நிறுவனத்தின் ரசாயன பிரிவின் ஜெயண்ட் எல் ஜி ஜெம் கூறுகையில், இந்த விபத்துக்கான விரிவான காரணத்தை கண்டறியவும், எதிர்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் இனி நிகழாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பணியாற்ற தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!

ABOUT THE AUTHOR

...view details