ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றத் தவிறிய இந்நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஆய்வில் இந்த ஆலை செயல்பட எவ்வித தடையும் இல்லை என அலுவலர்கள் அதிகாரப்பூர்வ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, இந்நிறுவனம் விஷவாயு கசிவு விபத்திற்கு பொறுப்பேற்காமல், தங்களுடைய ஆலை விரிவாக்கத்திற்கும், பணிகளுக்கும் சான்றிதழ் வழங்கிய அரசு அலுவலர்கள் மீது குற்றஞ்சாட்டிவருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலர், இந்நிறுவனம் சில அபாயகரமான வேதிப்பொருள்களைத் தவிர மற்ற பொருள்களுக்கு உரிய அனுமதிப்பெறவில்லை என்றும், அரசு வணிகங்களை விரிவாக்குவதற்கும், செயல்படுவதரற்கும் பல்வேறு சுற்றுச்சூழல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அரசின் இந்தச் செயல் நாட்டில் சுற்றுச் சூழலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திவருவதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.