தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி கடிதம் - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் கிரண்பேடி கடிதம்
ஆளுநர் கிரண்பேடி கடிதம்

By

Published : Dec 23, 2020, 5:48 PM IST

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை. கடற்கரை சாலை, ஓட்டல்களில் கொண்டாடலாம் என முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (டிச.22) தெரிவித்தார்.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல் நடைபெறலாம். பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இன்று (டிச.23) முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். அதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details