இன்று உலக நெகிழிப் பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுச்சூழல் வனப்பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று உலகம் முழுவதும் நெகிழிப் பை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நாளில் நாம் அனைவரும் நெகிழிப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்போம். இனி நெகிழிப் பைகளின் உபயோகத்தை தன்னால் இயன்ற அளவிற்கு குறைப்பதாக உறுதியளிப்போம். உலகம் முழுவதும், நீர்நிலைகள், நிலங்கள், உள்ளிட்டவைகள் நெகிழிப் பொருள்களால் சூழ்ந்துள்ளன. நாம் உண்ணும் உணவுப் பொருள்கள்கூட பெரும்பாலும், நெகிழிப் பொருள்களாலே பாதுகாக்கப்பட்டுவருகிறது. இவை உலகளவில் மாசின் அளவை அதிகரிக்கின்றன.