டெல்லி:2007ஆம் ஆண்டில் நடந்த லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஷகீல் அஹமது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலர்களால், சனிக்கிழமை (ஆக.29) கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் 2007ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக ஷகீல் அஹமது என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை காவலர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் ஷகீல் பெங்களூருவில் இருந்து வெளிநாட்டு தப்பிச் சென்றார். தொடர்ந்து, இவரை தேடப்படும் குற்றவாளியாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் பதுங்கியிருந்த ஷகிலை தேசிய புலனாய்வு அலுவலர்கள் இன்று கைது செய்தனர். இவர் சவுதி அரேபியாவில் இருந்து நேற்று இந்தியா அழைத்துவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தொழிலதிபர் கடத்தல் வழக்கு: பயங்கரவாதி தவ்ஃபீக் குறித்து திடுக்கிடும் தகவல்கள்