காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இணையம், தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டு, காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது.
இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். காஷ்மீர் மாணவர்கள் அதிகளவில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவருவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.