மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் குடிசையொன்றில், நான்கு குட்டிகளை சிறுத்தை ஒன்று ஈன்றது. தற்போது மழைக்காலம் என்பதால் வனப்பகுதியில், ஈரத்தன்மையும், குளிர்ச்சியும் இருப்பதால் குட்டிகளை ஈன்றுவதற்காக கிராமத்திற்குள் வந்ததாக வன அலுவலர் துஷார் சவான் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சிறுத்தை கிராம மக்களுக்கோ, வனத்துறையினருக்கோ தீங்கு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி சென்ற சிறுத்தை...! வைரல் வீடியோ...! - சிறுத்தை
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே நான்கு குட்டிகளை ஈன்ற சிறுத்தை ஒன்று, தனது குட்டிகளை ஒவ்வொன்றாக காட்டிற்குள் எடுத்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோ: தனது குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி எடுத்துச் சென்ற சிறுத்தை
அந்த சிறுத்தை தனது குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு காட்டிற்குள் எடுத்துச் சென்றது. இதுவரை எவ்வித பிரச்னையும் இல்லை. தொடர்ந்து பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கலிபோர்னியாவில் பிறந்த அரியவகை சிறுத்தை குட்டிகள்!