தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் உள்ள பன்றிகளைப் பிடிப்பதற்காக விவசாயிகள் வலை அமைத்துள்ளனர். அந்த வலையில், எதிர்பாராத விதமாக ஐந்து வயதுடைய சிறுத்தை சிக்கிக்கொண்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நேரு விலங்கியல் பூங்காவைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், வலையில் சிக்கித் தவித்த சிறுத்தையை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுத்தையை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.