யானை, புலி, சிறுத்தைகளின் எலும்பு, நகம் மற்றும் தோல் ஆகியவை கள்ள சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு விலை போவதால், சட்டத்திற்கு விரோதமாக விலங்கு வேட்டைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சிறுத்தை குட்டி தோலை கடத்த முயன்ற 4 பேர் கைது! - leopard skin traffickers
ஹைதராபாத்: ரச்சக்கொண்டாவில் சிறுத்தை குட்டியை வேட்டையாடி அதன் தோலை கடத்தி விற்க முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையொட்டி புலிகளை வேட்டையாடி அதன் தோலை விற்பனை செய்து வந்த 8 முதல் 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலை தெலங்கானா மாநிலம், ரச்சகொண்டா காவல்துறையினர் கடந்த திங்கள் அன்று கைது செய்தனர்.
கைது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஆந்திரா - ஒடிசா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் எல்லை பகுதியில் உள்ள ஸ்ரீகாக்குளம் பகுதியில் 2 வயதேயான சிறுத்தை குட்டியை மூன்று மாதத்திற்கு முன்பு கடத்தி, அதன் தோலை ரூ. 5 லட்சத்திற்கு இந்த கும்பல் பேரம் பேசியிருந்தது. இதுவே புலி தோலாக இருந்தால் ரூ.25 லட்சம் வரைக்கும் விலைபோயிருக்கும் என தெரிவித்தனர்.