இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியையும், ஜம்மு - காஷ்மீரின் லேயையும் இணைக்கும் 490 கி.மீ., நீளம் கொண்ட லே-மணாலி நெடுஞ்சாலை பனிப்பொழிவின் காரணமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு மூடப்படும்.
எல்லை சாலைகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த தேசிய நெடுங்சாலையில், பனிப்பொழிவு அகற்றப்பட்டு மீண்டும் கோடை பருவ காலம் தொடங்கும் மே மாதத்தில், திறக்கப்பட்டு சாலை போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.