அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று அகமதாபாத் வந்த அவரை பிரதமர் மோடி உள்ளிட்ட இந்திய அரசு விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். அதைத்தொடர்ந்து மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். ட்விட்டரிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானது.
ட்ரம்ப்பின் வருகையை எதிர்த்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களிலும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. கொல்கத்தாவின் தர்மதலா என்ற இடத்தில் தொடங்கிய இந்தப் பேரணி அமெரிக்க சென்டரில் நிறைவடைந்தது.