பீகாரில் உள்ள மெஹந்திகன்ச் பகுதியில் டிவி விற்பனை செய்யப்படும் கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் அனைத்து வகையான டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. அக்கடையின் பின்புறம் கடைக்கு சொந்தமான குடோன் உள்ளது. குடோனில் அனைத்து வகையான நிறுவனங்களின் டிவிக்களும் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் அங்கிருந்த எல்இடி (LED) டிவிக்களை திருடிச் சென்றுள்ளனர். பின்னர், கடைக்கு வந்த உரிமையாளர் குடோனில் இருந்து டிவிக்கள் திருட்டுப் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
எல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் திருடர்கள்: வெளியான சிசிடிவி காட்சிகள்! - எல்இடி டிவிக்கள் கொள்ளை, சிசிடிவி காட்சி வெளியானது
குடோனில் இருந்து எல்இடி டிவிக்களை கொள்ளையர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
LED tv theft
இதனையடுத்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கடையின் உரிமையாளர் சோதித்துள்ளார். அதில் கொள்ளையர்கள் டிவிக்களை திருடிக் கொண்டுபோவது தெரியவந்தது. இது தொடர்பாக உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெடித்துச் சிதறிய பொட்டலம்! பயணிகளை அதிர்ச்சியில் உறையவைத்த சம்பவம்! சிசிடிவி காட்சிகள்
TAGGED:
LED TV theft in bihar