கரோனா பரவலை தடுக்க வேறு வழியில்லாததால், நாடு கரோனா வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபு ஜகஜீவன் ராமின் நினைவுநாளில், விதான சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாவது, "நமக்கு வேறு வழியில்லை, இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கூட அதையே தான் கூறியுள்ளார்.
நாம் ஆம்புலன்ஸ் சேவையை அதிகரித்துள்ளோம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இது மிகவும் முக்கியமானது நம்மைப் பாதுகாக்க” என்றார்.