ஒட்டுமொத்த இந்தியாவும் சந்திரயான்-2 திட்டத்திற்காக இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் மேற்கொண்ட முயற்சியை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி தொடங்கி நாட்டு மக்கள் அனைவரும் இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பெருமிதத்துடன் அங்கீகரித்துள்ளனர்.
'வெற்றி, தோல்வி, தலைமைப் பண்பு' - இஸ்ரோவில் அப்துல் கலாம் கற்றுக்கொண்ட பாடம் - இஸ்ரோ தலைவர் சிவன்
வெற்றி, தோல்வியை குழுவும் தலைமையும் எப்படி அணுக வேண்டும் என்ற பாடத்தை தன்னுடைய தலைவர் சதீஷ் தவானிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அப்துல் கலாம் கூறியுள்ளார்.
வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல, முயற்சியே உயர்வுக்கான அடிப்படையாகும். இதை உணர்த்தும் வகையில் இந்திய மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட, மக்கள் குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், தான் இஸ்ரோவில் பணியாற்றிய போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அடிக்கடி குறிப்பிடுவார். அந்த சம்பவம் என்ன என்பதைத் தற்போது பார்ப்போம்...
1973ஆம் ஆண்டு 'ரோகிணி' செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டத்தை இஸ்ரோ மேற்கொண்டது. அதன் திட்ட இயக்குநராக அன்றைய இளம் விஞ்ஞானியான அப்துல் கலாம் நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் கடும் உழைப்புக்குப்பின் 1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டம் தயாரானது என அப்போதைய இஸ்ரோ தலைவர் சதீஷ் தவானிடம், அப்துல் கலாம் தெரிவித்தார். செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறத் தொடங்கியது. முதல் கட்ட நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேறிய நிலையில், இரண்டாவது கட்ட நிகழ்வு தோல்வியடைந்து செயற்கைக்கோள் வங்கக்கடலில் விழுந்தது.
இன்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் துணையாக அதன் தலைவர் சிவனும், அவரின் குழுவுக்கு ஒட்டுமொத்த நாடும் உறுதுணையாக நிற்கிறது. வெற்றி, தோல்வி அல்ல முயற்சியே என்றும் நிரந்தரம்.