தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இரண்டாவது நினைவு நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

By

Published : Aug 16, 2020, 1:59 PM IST

கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை...!
கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை...!

முன்னாள் பிரதமரும் பாஜகவை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில், வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள், வாஜ்பாய் குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2ஆம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை...!

இது குறித்து ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாரத் ரத்னா விருது பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய், நாட்டு பற்றிற்கும், கலாசாரத்திற்கும் குரலாக இருந்தவர். அவர் சிறந்த அரசியல்வாதி மட்டுமின்றி, பாஜகவை உருவாக்கி ஒருங்கிணைப்பதில் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்' என நினைவைப் பகிர்ந்துள்ளார்.

கார்கில் நாயகனுக்கு 2ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே கார்கில் யுத்தம் நடைபெற்றது. அதில், இந்தியா வெற்றி கண்டது.

அதுமட்டுமின்றி அணுகுண்டு சோதனை, புதிய தொலைத்தொடர்பு கொள்கை, அனைவருக்கும் கல்வி இயக்கம், அமெரிக்கா உடனான நல்லுறவு, லாகூருக்கு பேருந்து போக்குவரத்து, சீனாவுடன் வணிகத் தொடர்பு, டெல்லி மெட்ரோ ரயில், உலகத்தரமிக்க தேசிய நெடுஞ்சாலைகள் எனப் பல திட்டங்களை, அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன - பி.எஸ்.எஃப் தலைவர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details