ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இந்த தினத்தை உருவாக்கியுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தைக் கொண்டாடிவருகிறது. இந்தாண்டு சுற்றுச்சூழல் தினத்தின் மையக்கருத்தாக 'உயிர்பன்மை' தேர்வுசெய்யப்பட்டுள்ளது. துறவியும் கவிஞருமான கபீர் தாஸின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது.
இதனையொட்டி, கபீர் தாஸின் வாசகம் மூலம் சுற்றுச்சூழல் தின செயல்பாடு பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலவரையின்றி ஒத்திப்போடாமல் ஒரு செயலை இன்றே செய்து முடிப்பது முக்கியமாகிறது. அடுத்த நொடியே உலகம் முடிவுக்கு வந்தால் என்னவாகும். எனவே, தயாராக இருங்கள். உடனடியாக செயலாற்றுங்கள்" என பதிவிட்டுள்ளார்.