தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் - லால்ஜி டாண்டனுக்கு மோடி இரங்கல்

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

leaders-condole-demise-of-mp-governor-lalji-tandon
leaders-condole-demise-of-mp-governor-lalji-tandon

By

Published : Jul 21, 2020, 10:23 AM IST

Updated : Jul 21, 2020, 10:45 AM IST

மத்தியப் பிரதேசத்தின் ஆளுநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

இவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ''அரசியலைப்பு விஷயங்களை நன்று கற்றுத் தேர்ந்தவர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன் நீண்ட மற்றும் இணக்கமான நட்பைக் கொண்டவர். லால்ஜி டாண்டன் செய்த சமூக பணிக்காக என்றும் நினைவுக்கூரப்படுவார்.

உத்தரப் பிரதேச பாஜகவை வலிமைப்படுத்தியதில் முக்கிய பங்கு லால்ஜி டாண்டனுக்கு எப்போதும் உண்டு. நிர்வாகியாக முக்கிய செயல்கள் செய்ததோடு, மக்கள் சேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். அவர் மறைவு எனக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு

Last Updated : Jul 21, 2020, 10:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details