ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகளைக் காணொலி வாயிலாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வரும் ஜூலை மாதத்திலிருந்து நீதிமன்றங்களைத் திறந்து வழக்கு விசாரணை நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் கோரிக்கையை முன்வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிற்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், "காணொலி வாயிலாக வழக்குகளை விசாரிக்கும்போது காணொலி, கேட்பொலியில் (ஆடியோ) பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வழக்குரைஞர்களால், வாதங்களில் முழு கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது என்று பார் கவுன்சலில் இருக்கும் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.