கர்நாடக சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவர் முதலமைச்சராக பதவியேற்றார். அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாளிக்கும் நோக்கில், லட்சுமணன் சாவடிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஏனெனில், 2012ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த இவர் சட்டப்பேரவையில் அடெல்ட் படங்களை பார்த்ததைத் தொடர்ந்து தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
'அடெல்ட் படங்களை பார்ப்பது தேச விரோதமாகாது' - கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு! - ஆபாச படங்கள்
பெங்களூரு: அடெல்ட் படங்களை சட்டப்பேரவையில் பார்ப்பது தேச விரோதமாகாது என கர்நாடக அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Karnataka Minister
ஆனால், தற்போது இவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இதுகுறித்து கர்நாடக சட்டத்துறை அமைச்சர் மதுசாமி கூறுகையில், "தார்மீக ரீதியாக அவர் செய்தது தவறாக இருக்கலாம். ஆனால், சட்டப்பேரவையில் அடெல்ட் படங்களை பார்ப்பது தேச விரோத குற்றமல்ல. அவர் எதிர்பாராதவிதமாக அடெல்ட் படத்தை பார்த்தார். இதனால், அவர் அமைச்சராக கூடாது என்று வாதிடுவது அர்த்தம் இல்லை" என்றார்.