தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.,யில் அதிகரிக்கும் தலித் மக்கள் மீதான தாக்குதல் - மாயாவதி குற்றச்சாட்டு - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

law-and-order-situation-in-up-revealing-truth-about-bjp-govts-claims
law-and-order-situation-in-up-revealing-truth-about-bjp-govts-claims

By

Published : Sep 8, 2020, 10:34 PM IST

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, “உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியில் நேற்று (செப். 7) தலித் பிரிவைச் சேர்ந்த சர்வேஷ்குமார் என்பவர் பலமுறை தாக்கப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

அதேபோல, மகாராஜ்கஞ்சில் கோவிந்த் சவுகான், ஷாஜகான்பூரில் ராஜ்வீர் மவுரியா, பரேலியில் வசீத், குஷினகரில் சுதிர் சிங், பண்டாவில் வினோத் கார்க் போன்றோர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.

இது தவிர, உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் (செப்டம்பர் 7) நேற்று ஒரு வாகன ஓட்டி கொலை செய்யப்பட்டார். இது உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கை காட்டுகிறது. அரசாங்க உரிமைகோரல்கள் குறித்த உண்மையை வெளிப்படுத்துகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் இதுவரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details