தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழில்நுட்பக் கோளாறு: ஜிஎஸ்எல்வி - எப் 10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு! - ஜிஎஸ்எல்வி-எப் 10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு

டெல்லி: தொழில் நுட்பக் கோளாறால் ஜிஎஸ்எல்வி-எப் 10 ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

GSLV
GSLV

By

Published : Mar 4, 2020, 10:32 PM IST

பூமியைக் கண்காணிப்பதற்காக இஸ்ரோ, விண்வெளிக்கு ஜிசாட்-1 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் உதவியுடன் நாளை ஏவ இருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ராக்கெட் ஏவப்படாது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திடீரென அறிவித்துள்ளது. முன்னதாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவுவதாக இருந்தது.

பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி வகை ராக்கெட்களின் உதவியோடு இஸ்ரோ விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பிவருகிறது. விவசாயம், புவி கண்காணிப்பு உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துவதற்காக ஜிசாட்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் உள்ள 17 இந்தியர்களுக்கு கொரோனா !

ABOUT THE AUTHOR

...view details