தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இறுதி அஞ்சலியில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு! - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முதலமைச்சர் நாராயணசாமி இன்று 150 நாட்களுக்கு பிறகு டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி சென்றார் முதலமைச்சர் நாராயணசாமி
டெல்லி சென்றார் முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Sep 1, 2020, 12:05 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று (செப்.1) மாலை டெல்லியில் நடைபெறுகிறது.

இதற்காக முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை புதுச்சேரியிலிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். கரோனா பாதிப்பை அடுத்து 150 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் நாளை முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details