தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி காஷ்மீரில் கைது! - லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி காஷ்மீரில் கைது

காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகக் கூறி 19 வயது இளைஞர் ஒருவரை காஷ்மீர் காவல் துறை கைது செய்துள்ளது.

Lashkar-e-Taiba terrorist arrested
Lashkar-e-Taiba terrorist arrested

By

Published : Jan 28, 2020, 7:18 PM IST

தடை செய்யப்பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டி காஷ்மீரிலுள்ள பாரமுல்லா மாவட்டத்தின் ஆண்டர்கம் பட்டன் பகுதியிலுள்ள சஜித் பாரூக் தார் என்ற 19 வயது இளைஞரை காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காஷ்மீர் காவல் துறையினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், "காவல் துறையின் மற்றொரு நடவடிக்கையாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஃபாரூக் அஹ் தார் என்பவரின் 19 வயது மகன் சஜித் பாரூக் தார் என்பவர் பாரமுல்லா மாவட்டத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளனர்.

மூன்று நாள்களுக்கு முன்னர், காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று முக்கிய பயங்கரவாதிகல் காஷ்மீர் காவல் துறையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவ கப்பல்கள் - தீவிர கண்காணிப்பில் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details