காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரது தலையில் பச்சை நிற ஒளி ஒன்று அடிக்கடி தென்பட்டது. இந்த ஒளியானது லேசர் துப்பாக்கி ஒளி என்றும் ராகுலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.
ராகுல் தலையில் லேசர் துப்பாக்கி ஒளியா? உள்துறை அமைச்சகம் விளக்கம் - காங்கிரஸ்
டெல்லி: ராகுல் காந்தியின் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மேலும், இதன் மூலம் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருப்பது தெரிய வந்திருப்பதாக அக்கட்சி சார்பில் உள் துறை அமைச்சகத்துக்கு கடிதமும் எழுதப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உள் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “ராகுல் காந்தி தலையில் தென்பட்ட பச்சை நிற ஒளியானது ராகுலை படம் பிடித்த புகைப்படக் கலைஞரின் செல்போனில் இருந்து வந்தது. பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை என சிறப்பு பாதுகாப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது” என்றார்.