தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரணாசிக்கு செல்லும் ராஜபக்ச! - வாரணாசிக்கு செல்லும் ராஜபக்சே

கொழும்பு: இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனது நான்கு நாள் அரசு பயணத்தின்போது வாரணாசிக்கு செல்லவுள்ளார்.

Rajapakse
Rajapakse

By

Published : Feb 6, 2020, 9:17 PM IST

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு அரசு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாள் அரசு முறை பயணம் நாளை தொடங்கவுள்ளது.

இந்த பயணத்தின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை ராஜபக்ச சந்திக்கவுள்ளார். இரு நாட்டு உறவுகளை இந்த பயணம் மேலும் வலுப்படுத்தும் என ராஜபக்ச வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ச நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்தபோது இலங்கையின் வளர்ச்சி திட்டத்திற்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த பயணத்தின்போது வளர்ச்சி திட்டத்திற்கான தொகை அளிக்கப்படும் என நம்புவதாகவும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி, சார்நாத், போத்கயா, திருப்பதி உள்ளிட்ட வழிபாட்டு தளங்களுக்கு ராஜபக்ச செல்லவுள்ளார்.

இதையும் படிங்க:தலைநகரம் யாருக்கு? டெல்லி தேர்தல் குறித்து அலசும் ஈடிவி பாரத்

ABOUT THE AUTHOR

...view details