காஷ்மீரில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
காஷ்மீர் நிலச்சரிவு எதிரொலி - தேசிய நெடுஞ்சாலையில் 270 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து பாதிப்பு! - காஷ்மீரில் நிலச்சரிவு
காஷ்மீர் : பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, மண் சரிவு ஆகியவற்றின் காரணமாக ஸ்ரீநகர் - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் 270 கிமீ நீளத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர்
அந்த வகையில், பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, மண்சரிவு ஆகியவற்றின் காரணமாக 270 கி.மீ நீளத்திற்கு ஸ்ரீநகர் - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 300க்கும் அதிகமான வாகனங்கள் திரும்ப முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.
இந்நிலையில், தகவலறிந்து விரைந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI), எல்லை சாலைகள் அமைப்பினரும் (BRO) இயந்திரங்கள் உதவியுடன் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.