டார்ஜிலிங்கில் நிலச்சரிவு குழந்தை உட்பட நான்குபேர் பலி! - டார்ஜிலிங்
மேற்குவங்கம்: டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர்.
Land sliding
மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் உள்ள அப்பர் லிங்செபங்கில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்கள் நிமா டோர்ஜி தமாங், பெம் டோர்ஜி தமாங், நிஹால் தமாங் ஆகியோர் என கண்டறியப்பட்டுள்ளது.