கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஆர்த்தி நகர் பகுதியில் பெண்களை மயக்குவதற்காக இளைஞர் ஒருவர் சாலையில் லம்போர்கினி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றது மட்டுமல்லாது சில சாகசங்களையும் காட்டியுள்ளார்.
அப்போது நடைபாதை பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவரை காரை விட்டு கீழே இறக்கி தர்ம அடி வழங்கியுள்ளனர்.