மக்களவைத் தேர்தலையோட்டி நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் , ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லல்லு பிரசாத் யாதவ், தேர்தல் பரப்புரையில் தேர்தல் பரப்புரையில் புதிய செய்முறை ஒன்றினை கையாண்டுள்ளார்.
டப்ஸ்மேஷ் செய்த லாலு பிரசாத் யாதவ்! - dubsmash
பீகார்: மோடியின் குரலுக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோடியின் குரலில் லாலு பிரசாத் யாதவ்!
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் குரலுக்கு டப்ஸ்மேஷ் செய்து அதை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடி அனைத்து இந்தியர்களின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறிய வாக்குறுதி, அந்த குரல் பதிவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு மோடியின் குரலுக்கு வாயசைத்து நக்கலாக லல்லு பிரசாத் வெளிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.