தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 16, 2020, 6:01 PM IST

ETV Bharat / bharat

சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்

ராஞ்சி: மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிறுவன தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆஜரானார்.

Lalu Prasad appears before CBI court in Ranchi
Lalu Prasad appears before CBI court in Ranchi

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதலமைச்சராக இருந்த போது மாட்டுத் தீவன ஊழல் நடந்தது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக லாலு பிரசாத் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தீவன ஊழல் தொடர்பாக ஆறு வழக்குகள் உள்ளன. இதில் முதல் நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ நீதிமன்றத்தில் லாலு பிரசாத் ஆஜர்

அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது தீவன ஊழல் வழக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் லாலு பிரசாத் இன்று ஆஜரானார்.

லாலு பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையும் படிங்க: கொளுந்து விட்டு எரியும் லாலு பிரசாத்தின் குடும்பப் பிரச்னை!

ABOUT THE AUTHOR

...view details