அசாமில் சோனிட்புர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சிறிய ஆற்றைக் கடக்க முயன்ற போது நீரின் அளவு அதிகரித்ததால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த 11 வயதான உட்டேர் எனும் சிறுவன் சற்றும் தாமதிக்காமல் ஆற்றில் குதித்து அந்த தாயையும் ஒரு குழந்தையும் காப்பாற்றியுள்ளான்.
இரு உயிரை காப்பாற்றிய 11 வயது சிறுவன்... - உட்டேர்
அசாம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தாயையும் அவர் குழந்தையையும் 11 வயதான இளம் சிறுவன் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஆனால் இன்னொரு குழந்தையை அவனால் காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் அசாம் மாநிலத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது
இது குறித்து சோனிட்புர் மாவட்ட நீதிபதி லக்ஹி ஜோதி தாஸ் கூறுகையில், "11 வயது சிறுவன் தன் வீரத்தையும் மகத்தான தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கி தாய் மற்றும் அவர் குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவரின் இந்த வீரத்தை பாராட்டுகிறேன். அச்சிறுவனின் வீரத்தை இந்திய அளவில் கொண்டு சேர்க்க முயற்சி செய்வோம்", என்றார்.