அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பெயர்களில் இருந்து உள்ளூர் தலைநகரங்கள் வரை, கூகுளில் தேடும்போது ஏதோ ஒருவகையில் தவறான பதில்கள் தருவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.
அவை நெட்டிசன்களுக்கு கலாய்க்க சிறந்த தலைப்பாகவும் மாறிவிடுகிறது. இதேபோல் தற்போது காலிஸ்தான் தலைநகரம் எது என்று கூகுளில் தேடும்போது லாகூர் என்று பதில் வந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் லாகூர், காலிஸ்தான் தலைநகரம் என்று கூகுள் கூறுவதால், மீம்ஸ் கிரியேட்டர்களின் வாய்களுக்கு அவல் பொறியாக மாட்டிக்கொண்டது.