கரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் சால்ட்லேக் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணிப்போரை காவல் துறையினர் எச்சரித்து வந்தனர். அப்போது, பிக்னிக் கார்டனில் இருந்து சால்ட்லேக் பகுதிக்கு வந்த காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். இதில், காரில் பயணித்தவர்களுக்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.