இதுகுறித்து அவர், கிழக்கு லடாக்கில் இந்திய-சீனா எல்லைப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனர்கள் மீண்டும் நம் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், சீனாவுக்கு உத்தியோகப்பூர்வமாக சென்ற பிரதமர்களின் பட்டியலை நினைவில் கொள்வது முக்கியம்.
- நேரு: 1
- சாஸ்திரி: 0
- இந்திரா காந்தி: 0
- மொரார்ஜி : 0
- ராஜீவ் : 1
- நரசிம்ம ராவ் : 1
- குஜ்ரால் : 0
- வாஜ்பாய் : 1
- மன்மோகன் சிங்: 2
- மோடி: 9 (பிரதமராக 5 முறை, முதல்வராக 4 முறை) என்று ட்வீட் செய்துள்ளார்.
சீனாவுடனான நமது எல்லைகளில் முழு நிலைமையும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, "சீனாவுடனான எங்கள் எல்லைகளில் உள்ள முழு நிலைமையும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அனைவருக்கும் உறுதிபட தெரிவிக்கிறேன். தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகள் முடிவுக்குவரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
கிழக்கு லடாக்கில் நடந்துவரும் சர்ச்சை குறித்து விவாதிக்க இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை சரிசெய்ய பல்வேறு மட்டங்களில் பல பேச்சுவார்த்தைகள் நடத்துப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டெல்லியை உலுக்கும் கரோனா: சுகாதார அமைச்சருடன் ஆளுநர் பேச்சு!